சாளுக்கிய பதாமி குகை நாட்டிய முத்திரைகள் காட்டும் நடராஜர் (பொஆ. 550 வாக்கில்)
சிவபெருமான் ஆடலுக்கும் இசைக்கும் மூலமாக அமைவதைப் புராணங்கள் கூறுகின்றன
84 முத்திரைகள் கொண்ட பதாமி குகை நடராஜர் சிற்பம் (பொஆ. 550 வாக்கில்) ஒரு பக்கத்துக்கு 8 கரங்கள் என்று மொத்தம் 16 கரங்களுடன் பலவித பரத நாட்டிய முத்திரைகளை வெளிப்படுத்தி நிற்கிறார். எந்த இரு கரங்களை ஒன்று சேர்த்தாலும் நாட்டியத்தின் ஒரு முத்திரை கிடைக்கும். இப்படி 84 முத்திரைகளை வெளிப்படுத்தும் சிற்பம் உலகில் வேறு எங்கும் இல்லை. மண்டபத்துக்குள் சென்றால் மகிஷாசுர மர்த்தினி, கணபதி, கார்த்திகேயன் சிற்பங்கள் உள்ளன. ஹரப்பாவில் கிடைத்த தலையற்ற உடைந்த ஆடும் வடிவமும் சிவபெருமானின் ஆடல்வல்லானின் வடிவமாகலாம் எனச் சிலர் கருதுகின்றனர். சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை ஒரு பக்கமும் சிவனும் விஷ்ணுவும் இணைந்த ஹரிஹரன் சிற்பம் மறுபுறமும் உள்ளன. எல்லாமே கலையழகு! இரண்டாவது குகைக்கோயில் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை நமக்கு விளக்குகிறது. வராக அவதாரம், திரிவிக்ரம அவதாரம் பிரமாதமாக செதுக்கப்பட்டுள்ளன. https://m.youtube.com/watch?v=EB41Ow2jSKs https://saravanamanian.wordpress.com/2018/01/23/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ https://tamil.samayam.com/photogallery/astrology/photoshow/63465154.cms http://starnewstamil.com/badami-cave-temples/ https://senthilmsp.blogspot.com/2015/03/blog-post_9.html https://www.hindutamil.in/news/spirituals/8925-.html https://en.wikipedia.org/wiki/Badami_cave_temples |