Friday, July 29, 2022

சுங்க வம்ச மரத்துக்குக் கீழே லிங்க வழிபாடு

பொயுமு187- இல் மௌர்ய பேரரசின் வலிமையற்ற வேந்தனான ப்ரஹத்ரதனைக் கொன்று விட்டு தளபதியாக இருந்த புஷ்யமித்ரன் அரசனான். இவனில் துவங்கிய சுங்க வம்சம் அந்தப் பேரரசை நூற்றுப்பத்து ஆண்டுகள் நடத்தியது. Sankara Narayanan G

மௌர்யர்கள் பரப்பியிருந்த பௌத்தத்தை நீக்கிய செயல் இவர்களுடையதே. புஷ்யமித்ரனின் மகனான அக்னிமித்ரனே காளிதாஸனால் தனது மாளவிகாக்னிமித்ரத்தில் கொண்டாடப்பெற்றவன். இவர்கள் காலத்தில் பலவிதமான வழிபாடு தொடர்பான கற்பலகைகள் கிடைக்கின்றன. மதுராவில் கிடைத்த இந்த இரண்டு கற்பலகைகளும் மிக இன்றியமையாதவை. ஒரு பலகையில் லிங்க வழிபாடு தெற்றென விளக்கப் பெற்றிருக்கிறது.

கின்னரர்கள் இருபுறமும் மாலையேந்தி நிற்க நடுவே மரத்தடியில் சிவலிங்கமானது வீற்றிருக்கிறது. மற்றொரு கற்பலகையில் ஏகமுக லிங்கமானது வீற்றிருக்கிறது. இதுவும் மரத்தடித் திண்ணையில் வீற்றிருக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. இவையிரண்டும் பொதுயுகத்திற்கு முன்பு லிங்க வழிபாடு எப்படியிருந்திருக்கும் என்பதற்கு அடையாளமாக அமைந்துள்ளன.


The Katra architrave, possibly representing Brahmins and the cult of the Shiva Linga, Mathura, circa 100 BCE

மரத்துக்குக் கீழே சிவலிங்கத்தை வைத்து வழங்கும் வழக்கம் மிகவும் பண்டைக் காலத்தைச் சேர்ந்தது. படத்தில் இடம் பெற்றிருப்பது சுங்கர் காலத்தைச் சேர்ந்தது. அதாவது இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையானது. இதில் மரத்தின் கீழ் சிவலிங்கமும் இருபுறமும் கந்தர்வர்கள் போற்றுவதும் அக்காலத்திய சிறிய சிவாலயத்தின் வடிவத்தை் காட்டுகிறது. மேலும் குப்தர் காலத்து முத்திரையொன்றில் சிவலிங்கத்துடன் "பாதபேச்வரர்" - மரத்தின் கீழ் இறைவர் என்றே குறிப்பிடப்பெற்றிருப்பது நோக்கற்பாலது. தமிழகத்திலும் பல்வேறு மரங்களோடான சிவாலயத் தொடர்பும் இதனோடு ஒப்பு நோக்கத்தக்கது. கச்சி, ஆனைக்கா என்று எல்லா இடங்களிலும் தல மரமாகக் கருதப்பெறும் மரங்களே ஒருகாலத்தில் எந்தையின் விதானமாக இருந்திருக்கும். படம் - இணையச்சுடுகை



A Sandstone Lintel Fragment showing a Shivalinga placed on a Peeda under a Pipal Tree and being worshipped by winged Maladhara Vidyadharas or Gandharvas, from Sunga Period. This was excavated from Butheshwar from 2nd to 1st Century BCE.
This artefact resides at the Government Museum, (hi: Rashtriya Sangrahalaya) formerly The Curzon Museum of Archaeology, Museum Road or Murari Lal Rajpal road, Dampier Nagar, Mathura, Uttar Pradesh, India. This museum is administrating by the State Government of Uttar Pradesh of India.

ஒரு மணற்கல் லின்டெல் ஃப்ராக்மென்ட் ஒரு பிப்பால மரத்தடியில் பீடத்தின் மீது வைக்கப்பட்ட சிவலிங்கத்தைக் காண்பித்து, சுங்கா காலத்தில் இருந்து இறக்கை கொண்ட மலதார வித்யாதரர்கள் அல்லது கந்தர்வர்கள் வழிபட இது BCE 2 முதல் 1 ஆம் நூற்றாண்டு வரை பூதேஷ்வரில் இருந்து அகழ்வு செய்யப்பட்டது.
இந்த கலை விளைவு அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது, (ஹி: ராஷ்ட்ரிய சங்க்ரஹாலயா) முன்பு கர்சன் அருங்காட்சியகம், அருங்காட்சியகம் சாலை அல்லது முராரி லால் ராஜ்பால் சாலை, டாம்பியர் நகர், மதுரா, உத்திரபிரதேசம், இந்தியா. இந்த அருங்காட்சியகத்தை இந்தியாவின் உத்திரபிரதேச மாநில அரசு நிர்வகிக்கிறது.


No comments:

Post a Comment

தொன்மையான நடராஜர்

  தொன்மையான நடராஜர்  இராஷ்டிரகூடரின்   காலத்தைச்   சார்ந்த   மும்பையின்   புறநகர்ப்பகுதியான   கரபுரி   என்னும்   எலிபெண்டா   தீவுகளின்   மகோ...